அம்பை

1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம்பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இத்தொகுப்பில் அம்பையின் 'சிறகுகள் முறியும்' (1976), 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' (1988), 'காட்டில் ஒரு மான்' (2000) ஆகிய தொகுப்புகளிலுள்ள கதைகள் அனைத்தும் - 42 சிறுகதைகளும் - 'ஆற்றைக் கடத்தல்' 'முடிவில்லா உரையாடல்' 'பயங்கள்' ஆகிய மூன்று நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.

உற்ற தேகம்

அவளுக்கு ரத்தமும் சதையும் உள்ள, நரம்புகளும் ரத்த நாளங்களும் ஓடும் உணர்வுள்ள கைகள் தேவை.

2 years ago