தொடர்புக்கு

உங்கள் கருத்துகளையும், மறுவினைகளையும் படைப்புகளின் கீழே பதிவு செய்யலாம்.

உங்களுடைய படைப்புகளை aroomagazine@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

விதிமுறைகள்

  • அறிவியல் புனைவு (science fiction), மிகைப்புனைவு (fantasy) படைப்புகளை மட்டுமே அரூவிற்கு அனுப்பலாம். இதைப் பற்றி மேலும் தெளிவு பெற அரூவில் வெளிவந்த படைப்புகளைப் பார்க்கவும்.
  • கதை, கவிதை, கட்டுரை, காமிக்ஸ், ஓவியம், புகைப்படம், இசை, நடனம், காணொளி, மீம்ஸ் போன்ற எந்த வடிவத்திலும் உங்கள் படைப்பு இருக்கலாம். புதுப்புது வடிவங்களையும், சோதனை முயற்சிகளையும் அரூ வரவேற்கிறது.
  • எழுத்து உருவாக்கங்களுக்கு வார்த்தை வரம்பு கிடையாது.
    • யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பதும் அவசியம்.
  • இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவையே எதிர்பார்க்கப்படுகின்றன.
  • மொழிபெயர்ப்புகளுக்குப் படைப்பாளரிடமிருந்தோ பதிப்பகத்தாரிடமிருந்தோ அனுமதி பெற்றிருக்கவேண்டியது அவசியம்
  • படைப்புகளுக்குப் பணம் தருவதோ, பணம் பெற்றுக்கொண்டு படைப்புகளை வெளியிடுவதோ அரூவின் வழக்கமல்ல.
  • படைப்புகளின் காப்புரிமை படைப்பாளிக்கே. வேறு இதழ்களில் மறுபதிப்பு செய்தால், அரூவில் வெளிவந்ததாகக் குறிப்பிட்டால் போதுமானது (முடிந்தால் சுட்டியுடன்).
  • விருப்பமிருந்தால் படைப்புகளுடன் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு அனுப்பவும். உங்கள் வலைப்பூ / இணையதளச் சுட்டிகளைச் சேர்க்கலாம்.