கே.பாலமுருகன்

மலேசியா, கடாரத்தில் வாழும் கே.பாலமுருகன் 2005ஆம் ஆண்டு முதல் தமிழில் சிறுகதை, நாவல், சிறுவர் நாவல், சினிமா விமர்சனம், பத்தி, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை கல்வி, இலக்கியம் என்று 25 நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகஙகளில் மாணவர்களுக்குச் சிறுகதை பயிற்சிகளும் வழங்கி வருகிறார். இதுவரை அநங்கம், பறை, களம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு அமரர் சுஜாதா நினைவாக ஆழிப் பதிப்பகம் நடத்திய உலகலாவிய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். மேலும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்கிற நாவலுக்குக் 'கரிகாற் சோழன்' விருதைப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவருடைய சிறுவர் நாவல்/சிறுவர் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அன்னை வேளாங்கன்னி அறிவியல் கலைக்கல்லூரி 2018ஆம் ஆண்டு 'தமிழ் நாயகர் தனி நாயகர்' விருதை அளித்துக் கௌரவித்தது. மேலும், நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் மாணவர்களுக்காக அவர் வழங்கிய இலவச கல்விச் சேவையைப் பாராட்டி 2020ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருதும் அளிக்கப்பட்டுள்ளது. தன் balamurugan.org என்கிற அகப்பக்கத்தில் தற்போது எழுதியும் வருகிறார். இவருடைய மூக்குத் துறவு என்கிற அறிவியல் சிறுகதை கடந்தாண்டு அரூ அறிவியல் சிறுகதை போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான பத்து கதைகளில் ஒன்றாகும். இதுவரை எழுதிய நூல்களின் எண்ணிக்கை கல்வி, இலக்கியம் சார்ந்து 38 நூல்கள் ஆகும். சமீபத்தில் இவரது குறும்படத்திற்காக மலேசிய அளவிலான சிறந்த குறும்படம் பிரிவில் சோழன் விருது கிடைத்தது.

பறத்தல்

இருளுக்குள் எல்லாமும் இருக்கின்றன. அதைக் கண்கள் கொண்டு பார்க்க இயலாது எனத் தெரிந்து கொண்ட கணத்தில் மனத்தைக் கொண்டு கற்பனை செய்யத் துவங்கிவிட்டேன். கண்களைக் காட்டிலும் மனம்…

11 months ago

சாடோங்

கைகளை விரித்துக் காட்டி நடனம் தன்னை ஒவ்வொருமுறையும் விடுதலை செய்கிறது எனச் சொல்லிப் பரவசப்படும்போது அவளது கண்களில் என்னுடைய பரந்தவெளியையும் உணர்ந்தேன்.

2 years ago

மாலை 7.03

எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னை நான் பார்த்துக்கொள்ளும் ஓர் அற்புதம் என் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

2 years ago

சக்கர வியூகம்

அங்கு நிற்கும் அவன் செத்து வீழ்ந்து சில நாள்களில் அவன் பெயர் தெரிய வரும்போது மண்டியிட்டு இறைவனிடன் இவனுடைய பெயரைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிற சிந்தனை…

3 years ago

தட்டான்களற்ற வானம்

வீட்டில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்களை உடனடியாக அழித்துவிட வேண்டும்.

4 years ago

உயிர்பெறுதல்

பல்லாண்டு காலங்கள் கரைந்தபின் மீண்டும் உயிர்த்தல் வரமென்றே கொண்டார்கள்.

4 years ago

ப்ரோதேஸ்

இங்கிருந்து தப்பிக்க வேண்டும். பித்துப்பிடித்த இந்நகரத்தின் கொடூர வாயிலிருந்து எச்சிலாக ஒழுகியோடிவிட வேண்டும்.

5 years ago

மூக்குத் துறவு

"இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

5 years ago

ஆழ்துயில் பயணங்கள்

நீங்கள் கண்ட வினோதமான கனவை விவரிக்க முடியுமா?

5 years ago

நீல நிறக் கண்கள்

"காட்டைப் பழிக்காதீங்கடா! காட்டானுங்களா… எல்லாம் மறந்துருச்சிலே… காட்டுப்பயலுக…"

5 years ago