ராம் தங்கம்

ராம் தங்கம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். தினகரன், விகடன் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். தற்போது முழுநேர எழுத்தாளராக, இலக்கியத்திலும், பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் கவனம் பெற்ற இவர் காந்திராமன், ஊர்சுற்றிப் பறவை, மீனவ வீரனுக்கு ஒரு கோவில் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். பொன்னீலன்-80 புத்தகத்தின் தொகுப்பாசிரியர். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்திற்காக சூரியனை எட்ட ஏழு படிகள் என்கிற சிறுவர் புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அமேசான் கிண்டிலில் இவரது கடவுளின் தேசத்தில் பயணக் கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

இவரது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு சுஜாதா விருது, அசோகமித்திரன் விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது உட்பட ஆறு விருதுகளைப் பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'வெளிச்சம்' சிறுகதை நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்த்துறையில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய ராஜவனம் குறுநாவல் சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்

கஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து கிடக்க வேண்டும். சிறகுகளைத் தேடிக் கண்டடைந்து…

3 years ago