ரவி பேலட்

தமிழ்நாடு தேனி மாவட்டம் பெரிய குளம் என்ற ஊரினைச் சேர்ந்த ரவி பேலட், மினிமலிசம், கேரிக்கேச்சர் போன்ற பன்முகத் தன்மையான ஓவியங்களை வரைகின்றவர். இவரது ஓவியங்கள் அதிகாரங்களுக்கு எதிராகவும், மானிட விழுமியங்களுக்கு ஆதரவாகவும் பேசுகின்றன. உயிர்மை, கல்கி, படச்சுருள், ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளுக்கும், ஏராளமான நூல்களுக்கும் முகப்பு ஓவியம் உட்பட பல படங்களை வரைந்துள்ளார். இன்குலாப் படைப்பாக்க மேன்மை விருது, கலைச்சுடர்மணி விருது பெற்றுள்ளார். ஓவியத்தை மையநீரோட்டமாகக் கொண்டு அதிக கவிதைகளை எழுதி வருகின்றார். மதுரையிலுள்ள தனியார்ப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணி புரியும் இவர், இந்திய நடுவண் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் நடத்திய ஓவியப் போட்டியில் தேசிய நிலையில் வெற்றி பெற்றவர்.

https://www.facebook.com/ravi.artist.98

அரூபம்

ஓவியர் ரவி பேலட் 'அரூபம்' என்கிற தலைப்பில் வரைந்த ஓவியம். அரூ எட்டாவது இதழின் அட்டைப்படம் இதுவே.

4 years ago