சௌந்தர்.ஜி

முன்னாள் வங்கி மேலாளராக இருந்து, தற்சமயம் முழுநேர ''மரபுவழி யோகக்கல்வி'' தரும் யோகசிரியராக சென்னையில் யோகக்கல்வி நிலையம் நடத்தி வருகிறார். வாசிப்பு பள்ளிப் பருவத்திலிருந்து வந்தாலும், தீவிர இலக்கிய வாசிப்பு, 2010 ஜெயமோகன் தளத்தின் மூலமே அறிமுகம். வெண்முரசை முதல் நாளிலிருந்து படிக்கும் நண்பர்கள் குழுவை இணைத்து, ''சென்னை வெண்முரசு கலந்துரையாடல்'' எனும் நிகழ்வை 2015 முதல் இவரின் யோகசாலையில் நடத்தி வருகிறார். கோவிட் ஊரடங்கு/வீடடங்கு காலத்தில் இணைய வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே தொடர்ந்து வாசிக்கவும், மேலும் கூர்தீட்டிக்கொள்ளவும் இந்த காலகட்டத்தைச் செலவழிப்பது என முடிவெடுத்திருக்கிறார்.

Website: http://www.satyamtraditionalyoga.com

Blog: PARNASALAI - பர்ணசாலை

சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்

இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து…

3 years ago