கலாப்ரியா

திருநெல்வேலியில் பிறந்த இவர் 1969லிருந்து 50 வருடங்களாகக் கவிதைகள் எழுதி வருகிறார். கசடதபற, கணையாழி, தீபம், வானம்பாடி என 1970 களில் வெளிவந்த இலக்கியப் பத்திரிகைகள் உள்ளிட்டு அனைத்து இலக்கியப் பத்திரிகைகளிலும் பெரும்பாலான வெகுசன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. வெள்ளம், தீர்த்த யாத்திரை, மற்றாங்கே, எட்டயபுரம், சுயம்வரம் மற்றும் கவிதைகள், உலகெல்லாம் சூரியன், அனிச்சம், வனம் புகுதல், எல்லாம் கலந்த காற்று, நான் நீ மீன், உளமுற்ற தீ, தண்ணீர்ச் சிறகுகள், தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி, ஆகிய தனித் தொகுப்புகளும் அவ்வப்போது அனைத்துக் கவிதைகளின் தொகுப்பாக ‘கலாப்ரியா கவிதைகள்’ என்ற தலைப்பில் மூன்று தொகுதிகளும் வந்துள்ளன. ”சொல் உளி’ இவரது பதினாறாவது கவிதைத் தொகுப்பு. தன் வரலாற்றுப் புனைவுக் கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள், இலக்கியப் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் என ஏழு நூல்கள் வெளிவந்துள்ளன. மொத்தம் 36 நூல்கள் வெளிவந்துள்ளன. பல கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, கவிஞர் கண்ணதாசன் விருது, கவிஞர் சிற்பி விருது, கவிஞர் தேவமகள் விருது, நூலாசிரியர் பதிப்பாலர் சங்கமான ‘பப்பாசி’ வழங்கும் கலைஞர் பொற்கிழி விருது, ஜெயகாந்தன் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது( மூன்றும் தலா ஒரு லட்சம் பணமுடிப்பு மற்றும் பாராட்டுக் கேடயங்கள்.) எனப் பல விருதுகள் பெற்றவர். பலர் இவரது கவிதைகளில் ஆய்வு மேற்கொண்டு இளம் முனைவர், முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். தற்போது தென்காசி அருகே இடைகால் என்ற ஊரில் வைத்து வருகிறார். மனைவி சரஸ்வதி, பணி நிறைவு பெற்ற முதுநிலை ஆசிரியை. மருத்துவர் அகிலாண்ட பாரதி, பொறியாளர் தெய்வநாயகி என இரண்டு புதல்வியர்.

ஒரு கனவு

நிறைந்து விட்ட மூத்திரப் பையுடன் அலைகிறேன் ஒதுங்க இடம்தேடி

5 years ago