ரவிஷங்கர்

ரவிசங்கர் ஜெர்லேஸின் சொந்த ஊர் கோவில்பட்டி அருகிலுள்ள கலிங்கப்பட்டி. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் BVSL முடித்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், கவிதைகளும் எழுதியிருக்கிறார். போர்ஹேயின் 'நீலப்புலி' சிறுகதையை மொழிபெயர்த்து 'பவளக்கொடி' சிற்றிதழில் வெளிவந்துள்ளது. சிறுகதைகளையும், கவிதைகளையும் மின்னூலாக வெளியிட்டிருக்கிறார். ராபர்ட்டோ டொலானோவின் 2666 நாவலைப் பற்றி விரிவான வாச்சியார்த்தம் எழுதியிருக்கிறார். எழுதாமைப் புத்தகம் என்ற நூதனமான கட்டுரையும், நகுலன் மற்றும் போர்ஹே பற்றி கட்டுரைகளும், உலக சினிமா பற்றிப் பல வாச்சியங்களும் எழுதியுள்ளார். லத்தீன் அமெரிக்க நாடக இயக்கம் பற்றி விரிவான பேட்டிகள் மற்றும் நவீன நாடக அரங்குகள் பற்றிய கட்டுரை கல்குதிரை 27இல் வெளியாகியுள்ளது. அலெக்ஸாந்தர் டாவ்ஸென்கோவின் ’The Enchanted Desna’ புத்தகத்தை இவர் மொழிபெயர்த்துள்ளார்.

உடைமாற்றி இளவரசியாகத் திரும்பிய கண்ணாடி: பாழி

நிர்வாணமென்பதை மறைக்கப் போர்த்தப்படும் ஆடை நிர்வாணத்தை அதிகரிக்கவே செய்கிறதென்ற – வினோதமாகத் தோன்றும் எளிய விஷயத்தை உணர்வதன் மூலமும் பாழிக்குள் நுழைய முடியும்.

5 years ago