தருணாதித்தன்

தருணாதித்தன் என்ற புனைப் பெயரில் எழுதும் ஸ்ரீ கிருஷ்ணனின் பூர்வீகம் திருச்சி. பள்ளி நாட்களிலிருந்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் வசித்து வரும் இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணி புரிய ஆரம்பித்தார். பின்னாளில் 'பாஷ்' பன்னாட்டு நிறுவனத்தில் ஆடோமோடிவ் (வாகன) மென்பொருள் மற்றும் டிஜிட்டல் துறையில் சீனியர் வைஸ் ப்ரெசிடென்ட் ஆக இருந்த இவர், நிறுவன வாழ்க்கையிலிருந்து விலகி இலக்கியம் மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தருணாதித்தனின் முதல் சிறுகதை 1997இல் கல்கி வார இதழில் இளம் எழுத்தாளர்களுக்கான போட்டியில் எழுத்தாளர் சுஜாதாவால் முதாலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அச்சு இதழ்களில் சில கதைகள் வெளியாயின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொல்வனம், பதாகை, திண்ணை,யாவரும், வாசக சாலை ஆகிய இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறார். 2016இல் எழுத்தாளர் ஜெயமோகனால் புதிய படைப்பாளர் வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டு, சொல்வனத்தில் வெளியான 'பருவ மழை' என்கிற சிறுகதை வாசகர் கவனம் பெற்றது. சுஜாதாவில் ஆரம்பித்து, கடந்து, அசோகமித்திரன், தி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, கி ராஜ நாராயணன், அ.முத்துலிங்கம் போன்ற மூத்தோர்களின் படைப்புகளில் ஆழ்ந்து, ஆதர்சமாகக் கொண்டவர். நவீனச் சிறுகதை பற்றிய தெளிவும் கோட்பாடுகளும் கொடுத்து, வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி மீண்டும் எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கும், நிறைய சிறுகதைகளைப் பிரசுரித்து, வாழ்த்தி உற்சாகப்படுத்திய சொல்வனம் மற்றும் பதாகைக்கும் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.

இணை

எல்லா க்வான்டம் எண்களும் ஒன்றாக இருந்தாலும், துகள் சுழலும் திசை இணைக்கு நேர் எதிராக இருக்கும். அதாவது ஒன்று வலமாகச் சுற்றினால் இணை இடமாகச் சுற்றும்.

11 months ago