சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைகதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம்.
புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.
எழுத்தாளர் ஓவியர் ஜெயந்தி சங்கரிடம் "கனவு" என்ற தலைப்பு கொடுத்து ஓவியங்கள் வரைய சொன்னோம்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முள் ஒன்றி நம் கற்பனையின் நீட்சிக்கே அடிகோலும்; அழிவுக்கல்ல.