இதழ் 11

அட்டைப்படம்: ஓவியர் டிராட்ஸ்கி மருது

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள்

அரூ குழுவினர்

போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 94!

புனைவின் அறிவியல் பற்றி…

யுவன் சந்திரசேகர்

'அறிவியல் புனைவு' என்பது, 'நிஜப் பொய்' என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்.

அறிவுப் பாதை முடிவும், புனைவுப் பயணத் தொடக்கமும்…

சரவணன்

அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன்.

நேர்காணல்
எஸ் ராமகிருஷ்ணன்

நேர்காணல்: எஸ்.ராமகிருஷ்ணன்

கணேஷ் பாபு

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை எழுதுவது சவாலான விஷயமே.

கவிதை

வழி

பாபுபிரித்விராஜ்

இந்தப் பாதை
நீ
தேர்ந்தெடுத்தது

ஓவியம், வரைகதை

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 5

டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

அடாசு கவிதை – 11

க்வீ லீ சுவி

கொரோனா தடுப்பூசி...

லிலி: தொடரோவியக் கதை – 9

சஞ்சனா

லிலி என்ற தொடரோவியக் கதையின் ஒன்பதாவது பாகம்.

அவனியாபுரம்: பாகம் 1

வரதராஜன் ராஜூ

வரதராஜன் ராஜூ வரையும் புதிய வரைகதைத் தொடரின் முதல் பாகம்...

கட்டுரை
தேவதேவன்

கவிதையின் மதம் – 7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்

தேவதேவன்

வாழ்வின் நடனத்தை - கவிதையின் நடனத்தை – நாம் கண்டுகொண்டோமா என்பதுவே நமது மிகப்பெரிய கேள்வி.

அறிவிலுமேறி அறிதல் – 7: புலன்சேர்க்கைத் தன்மையும் கலையும்

வேணு வேட்ராயன்

கவிஞர்களில் உருவகங்களின் (metaphor) உருவாக்கம் மற்றும் நிலைபெறுதலில் புலன்சேர்க்கைத் தன்மையின் பங்கு இருக்கலாம் என ஊகிக்கிறார் வி.எஸ்.ராமச்சந்திரன்.

காதுகள்

சாத்தானின் மொழியில் தெய்வத்தின் குரல்கள்

சௌந்தர்.ஜி

இந்த நாவல் முழுவதும் மரபுக்கும், நவீனத்திற்கும் இடையே சுழன்று சுழன்று, கதாநாயகன் மாலி எனும் மகாலிங்கம் பந்தாடப்படுகிறான். அந்த உளமயக்கும் உளைச்சலும் வாசிக்கும் நமக்கும் தொற்றித் தொடர்ந்து இறுதிவரை வருகிறது.

எஸ் ராமகிருஷணன்

எனது எழுத்தாளர்

கணேஷ் பாபு

துணையெழுத்து வெளியான நாட்களில் எந்தப் பேனா வாங்கினாலும், 'துணையெழுத்து', 'எஸ்.ராமகிருஷ்ணன்', 'நீரில் மிதக்கும் நினைவுகள்' போன்ற துணையெழுத்து கட்டுரைகளின் தலைப்புகளைத்தான் எழுதிப்பார்ப்பேன்.

எஸ்.ரா என்னும் வரலாற்றுப் பேராசிரியன்

வினோத்

வரலாற்றைப் புரிந்துகொள்ள அறிவியல்பூர்வமான சிந்தனையும், திறந்த மனதும், கூர்மையான அவதானிப்புகளும், தொடர்ந்த தேடுதலும் வேண்டும் என்று கூறும் எஸ்.ரா தனது கட்டுரைகள் மூலம் அதற்கான பயிற்சியை நமக்குக் கொடுக்கிறார்.

எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல்

ராம் தங்கம்

கஜுரகோ சிற்பம் பற்றி அவர் எழுதும் விதத்தைப் பார்த்தால் இந்தச் சின்னஞ்சிறிய வாழ்க்கையில் நாம் ஏன் கூண்டுக்குள் இன்னும் அடைந்து கிடக்க வேண்டும். சிறகுகளைத் தேடிக் கண்டடைந்து உடனே எஸ்ரா கூறும் உலகிற்கெல்லாம் சென்று சேர வேண்டும் என்ற விழைவை ஏற்படுத்திவிடுகிறார்.

எஸ் ராமகிருஷ்ணன்

எஸ்.ரா – என் அறிவுலக ஜன்னல்

பு. பிரியதர்சினி

எஸ். ராவின் காலடிச் சுவடுகளை பின்பற்றி சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ என பாதைதோரும் பரவசம் நம்மை தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.

எஸ் ராமகிருஷ்ணன்

தமிழின் பெருமை எஸ்.ரா.

பிருந்தா சாரதி

எழுத்தாளன் என்றால் ஏழை, தோல்வியடைந்தவன், உதவி கோருபவன் என்ற அவச்சொற்களை அழித்தவர்களில் எஸ்.ரா.வும் ஒருவர்.

போட்டியில் தேர்வான கதைகள்
100 நலன்கள்

100 நலன்கள்

முரளிதரன்

நினைவில் ‘தண்டனைக் கூடம்’ என்ற பெயர் மட்டும் நிற்க அதில் ‘மரணம்’ என்ற சொல் இல்லாததும் அவளுடைய தந்தையின் நினைவுகளும் ஒரு பேரலையைப் போல நெஞ்சில் வந்து மோதின.

அ-சரீரி

அ-சரீரி

பிரபாகரன் சண்முகநாதன்

ஆத்தா என்பது அவருடைய மெய்நிகர் உதவி செயலியின் பெயர். குரலையும் அவரது ஆத்தாவின் குரல் போலவே அமைத்துக்கொண்டார்.

இறுதி யாத்திரை

இறுதி யாத்திரை

சுசித்ரா

காலம், ஓர் நன்றியுள்ள பிராணி. வளர்ப்புநாய், தான் குதறிய மாமிசத்தை வீட்டில் நன்றியுடன் சேர்ப்பதுபோல, காலம் தன் களிம்பை மட்டும் என் பரப்பின் மீது கனக்கக் கனக்கப் படியவிட்டுச் செல்கிறது. அந்தக்களிம்பை என் கிழங்கிலிருந்து சீவி மழித்தெடுக்க ஒரு சவரக்கத்திக்கூடவா இல்லை, இப்பிரபஞ்சத்தில்?

உளதாய் இலதாய்

உளதாய் இலதாய்

சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி

"இப்போது கைவிடப்பட்ட கிரகம்… முன்னர் யாராவது இருந்திருக்கூடிய வீடுதானே?”

என்றூழ்

விஜய ராவணன்

நிலைகுத்தி நிற்கும் என் கண்களை உற்று நோக்கி, “உங்கள் கண்களில் தெரியும் தீராத தனிமையையும் வெறுமையையும் என்னால் முடிந்தவரை விலக்க முயல்வேன்...” என்றது.

கார்தூஸியர்களின் பச்சை மது

கார்தூஸியர்களின் பச்சை மது

வளன்

மடாலயத் தலைமைத் துறவியைத் தவிர அங்கிருந்த துறவிகளுக்கு யார் அந்த பானத்தைப் பருகியிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அங்கிருந்த யாவருக்கும் பெருவாழ்வின் ஒரு துளியையாவது ருசித்துவிட வேண்டுமென்ற ரகசிய ஆசை இருந்தது.

சனி பகவான்

சனி பகவான்

விஜய் வேல்துரை

"அவ பாதிதான் மனுஷி, மீதி மின்னணுக் கருவி. FBAI Mark V வோட மனித அடியாட்கள்.”

சொல்லாழி வெண்சங்கே

சொல்லாழி வெண்சங்கே

கமலதேவி

ஒன்றிலிருந்து ஒன்று வெடித்து உண்டான இவ்வெளியில் உன்னிலிருந்து உன்னைப் படைக்கும் நீயே சக்தி. நீ கொண்ட தசைவடிவம் வலிமை பெறட்டும். படைப்புக்கென நீ கொண்ட மென்மையைப் பட்டின்நூலென அறுந்திடாத சரடாக்கு.

நோய் முதல் நாடி

நோய் முதல் நாடி

வேணு தயாநிதி

குழந்தையோட வாழ்நாள் ஆரோக்கியத்துக்கான எல்லா பரிந்துரைகளுக்கும் டிரீட்மெண்ட் தேர்வுகளுக்கும் ஜீனோம்ல உள்ள ரெலவண்ட் இன்ஃபர்மேஷனையும் கன்ஸிடர் பண்ணனும்னு இந்தச் சட்டத்தோட முதல் ஷரத்து சொல்லுது.

பாஞ்சஜன்யம்

பாஞ்சஜன்யம்

லோகேஷ் ரகுராமன்

மனிதன் இயற்கையின் தாழொலிக்கும் மீயொலிக்கும் இடைப்பட்ட பயல். அதனாலேயே பாவப்பட்ட பயல்.

பூர்ணகும்பம்

பூர்ணகும்பம்

சுசித்ரா

அவள் உடல் அதில் இருக்கிறதென்றால் நான் யாருக்குக் கணவன்? இல்லை, இனிமேல் நான் கணவன் இல்லை. மாதவி இல்லை. அவள் உடல் இதில் இருக்கிறது. உடல் இல்லாமல் நான் கணவனாக இருக்க முடியாதா என்ன? அப்படியென்றால் உடலுக்குத்தான் நான் கணவனா?

வலசை

வலசை

விஸ்வநாதன் மகாலிங்கம்

பூச்சி மருந்து பாட்டில் மீது ஒரு மொனார்க் பட்டாம்பூச்சி அதன் ஆரஞ்சு நிறச் சிறகுகள் பொன்னொளிர அமர்ந்திருப்பதைக் கண்டார்.

குறிப்பிடத்தகுந்த கதைகள்
அது

அது

கு.அசோக் குமார்

"முதலில் எதிரில் இருக்கும் உயிரியைப் போல இந்தப் பெட்டியை விட்டு வெளியேற முடியுமா எனப் பார்க்கலாம்," என்று முடிவெடுத்தது.

அரூ அறிபுனைப் போட்டி #500

நகுல்வசன்

கோவிட்-3 போன்ற கொடூரமான காலகட்டத்தில்தான் பொது ஜனம் அதுவரையில் ஏற்றுக்கொள்ளத் தயங்கிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும்.

சக்கர வியூகம்

சக்கர வியூகம்

கே.பாலமுருகன்

அங்கு நிற்கும் அவன் செத்து வீழ்ந்து சில நாள்களில் அவன் பெயர் தெரிய வரும்போது மண்டியிட்டு இறைவனிடன் இவனுடைய பெயரைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிற சிந்தனை சட்டென தர்மாவின் மனத்தில் தோன்றியதும் துப்பாக்கியைக் கீழறக்கி வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

செம்புலப்பெயல்

செம்புலப்பெயல்

பார்கவி

பூமியில ஒரு மீன் விக்கிற காசுல வானத்துல ஒரு குடும்பம் பறந்துகிட்டுச் சாப்பிடலாம். நீயும் வானத்தைத்தான வித்துகிட்டுருக்க?

பகுதாரி

கிஷோர் ஸ்ரீராம்

நீ சில ஸ்வரங்களோட ஒரு பாட்டைப் பாடினா அதே ராகத்தை அடித்தளமா எடுத்துக்கிட்டு அந்த ராகத்தோட பிரயோகத்துல சில மாற்றங்களைச் செய்து அந்த சாப்ட்வேர் திரும்பப் பாடும்.

முன்னத்தி

முன்னத்தி

ரஃபீக் இஸ்மாயில்

இப்போது நான் 200 பில்லியன் அஸ்ட்ரோ நாட்டிகல் மைல் பரப்பளவு கொண்ட ஒரு சிறைக்குள் இருப்பதாக உணர்கிறேன்.


நன்றி: நண்பர்கள் வே.நி.சூர்யா, ஷ்ரேயா