தனிமை

< 1 நிமிட வாசிப்பு

இளஞ்சேரன் தனது The Cosmonaut Manifesto என்ற தொகுப்பில் வெளியான ஒரு கவிதையை மொழிபெயர்த்துள்ளார்.


பிரிந்து,
ஆழ விண்வெளியில்.
கீச்சிடும் சத்தம். விண்பெட்டி.
தொலைந்துவிட்டேன்.
காப்பாற்றுங்கள்…

நான் மட்டும்,
விண்பெட்டியில் மிதக்க,
தனிமையில், தனியாக,
சட்டகங்கள் நகர,
காகிதங்கள் ஒரிகாமியாக மடிய,
அகற்றப்பட்ட கம்பிகளும்
கொடூரக் கலைக் காட்சிகளும்
விண்பெட்டியைச்
சவப்பெட்டியாய் மாற்றின.

தூக்கத்திலிருந்து எழுப்பி,
காஸ்மோ புயலில் விடப்பட்ட துணிபோல்
இங்கும் அங்கும் வீசப்பட்டேன்.

கண்களுக்குத் தெரிந்தது-
இருட்டும் அதன் கிரகநரகம்.
மூடுபனியில் மறைந்திருந்த ஜன்னலிலிருந்து
அதே கீச்சிடும் சத்தம்,
காணாத விரலின் எழுத்துகள்
கண்ணாடியில் வரைந்த
கடிதம் எனக்கு:

“தனித்தல்ல…”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்