பிரபஞ்சத்தின் நிறம்

< 1 நிமிட வாசிப்பு

ஆகாயமெங்கும் பறந்து அலைந்த
இறகுகளின் நிறங்களை
வானவில் கரைத்துத் தெளிப்பதை
மழை முகில்கள் அறிவித்தன
குகைகளுக்குள் இருந்து
இறகுதிர்ந்த பறவைகள் பலவும்
எழத் தொடங்கின
தங்களுக்குரிய இறகுகளின் நிறங்களைப்
பிரித்தறிய இயலாத் தவிப்பில்
வானத்தைத் தன்னருகே அழைத்து
இறகுகளைப் பரப்பின
ஊர்வனவும் நிறங்களை மாற்றிக்கொண்டு
உசுப்பேற்றித் தாவின
மலைக் குகை எங்கும்
மிருகங்களின் ஓவியங்களை
ஆதிவாசிகள் படைத்து மறைய
இறகுகள் பொசுங்கி
பறவை இனங்கள் மணக்கத் தொடங்கின
பிரபஞ்சமெங்கும்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்