டோனி ப்ரஸ்லர் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

கருந்துளை

பனிப்பிம்ப வாசல்வழி புகைப்போக்கி சுருள்கொடியில்
அரளி வீச்சம்
பரவும் பொழுதனைத்து
கூவும் அவ்வளி
நீர்ப்பிம்பங்களில் நீண்டுகொண்ட அத்தும்
கையொடிந்த மீத்துடுப்பும்
துளிவிதழ் கொம்பெனவும்
சதா மையல்

கம்பவன காற்றில் வெனப்பட்டு
அம்மணமாய் அலைகிறது
அம் அமில
மழைக்
கல்


வேற்கரு வனத்தின் கிளைகளில் வானத்துளைகள்

ஆகமம் உடை பட்சினிகள்
இமையற்ற கண்களில்
புரையோடிய கனவுகளை
அலம்பும் கற்காற்றை
மாயமைக்கேங்கும் கருந்தாளென
வேளைகளில் வடுக்கள் முற்றும்
கடக்கால் நண்டுகளாய்
தப்பிச்செல்ல வழி மறந்து
விழும் கதிப்பயனை
நிழல் பூண்டவள்
திறவாக் கதவைத் திறக்க
பூட்டைப் புரைக்கிறாள்


விடி

தளிர்
விழிக்கும் நேரம்
அரவமற்றவள்
காணாது காணும்
இன்னுருவை நோக்கி
இருப்பின் இல்லாததிலிருந்து நகரும் கண்ணாடியில்
உரு மில்லை
நிற மில்லை
தரு மில்லை
அப்பச்சையில்


துகள்

நீர்ச்சதை
நீள்ப்பிடரினரை
நிறைக்களிச்சிவப்பு
அதிப்பொங்கும்
சிறுகுழல்


காண்

காடுறங்கும் பொழுதே சென்றிருந்தேன்
கம்பிளிகள் இப்போதெல்லாம் குளத்திலும் முளைக்கிறது
பெய் பெய் பெய்யனப் பெய்தும்
நிறைவில்லை
விரியும் மூக்கொன்றை மேலிருந்து
இறகில் நீந்தி கொஞ்சம் மண் பறித்தேன்
அமிழ் தட்டைகள் புழுதியில் நெளிகிறது

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்