புத்தனின் தலை

< 1 நிமிட வாசிப்பு

ஆதியின் வாசலில்
சிரசினை எதிர்பார்த்து
சம்மணமிட்டு அமர்ந்திருந்தது முண்டம்
பேரண்டத்தின் கொல்லைப்புறத்திலே
கொய்தவனின் வீடு
முற்றத்தில் குருதி தெளித்து
போடப்பட்ட கோலம்
பூசணிப்பூ இருக்க வேண்டிய இடத்தில்
சிரித்தபடி கிடக்கிறது
கைவிடப்பட்ட ஒரு புத்தனின் தலை

2 thoughts on “புத்தனின் தலை”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்