யுவராட்சஷன்

< 1 நிமிட வாசிப்பு

பேரண்டத்தின் எல்லைப்பகுதியில்
இருக்கும் ஒளியறாக்காட்டிலிருந்து
ராட்சஷமனிதர்கள்
பூமிக்கு அருகில் வந்தார்கள்.
பிரம்மாண்டமான அவர்களுக்கு
கிரகங்கள் எல்லாம் கனிகள்தான்.
ராட்சஷனின் பிள்ளை யுவராட்சஷன்
கேட்டான்:
அப்பா..அப்பா..
எனக்கந்த நீலக்கனி வேண்டும்
என்று,
படக்கென்று பூமியைப் பறித்து
அவன் கையில் கொடுத்துவிட்டான்
ராட்சஷன்.
கையிலிருந்த பூமிக்கனியைப் பார்த்து
உள்நாக்குகூட உணர்ச்சியில் துடித்தது
யுவனுக்கு.
ஆசையில் ஒருவாய் கடித்துவிட்டு
தூ… உப்புக்கரிக்கிறது
என்று துப்பிவிட்டான்.
நல்லவேளை நம்மைக்
கடல்கள் காப்பாற்றின.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்