வெற்றுக் கணங்கள்

மேல் நெற்றியில் துளிர்த்த வியர்வையில் டுடுங் கொஞ்சம் சரிந்து கண்களை மறைக்க, இது நிச்சயம் கனவில்லை என்று ஆயிஷா தனக்கே சொல்லிக்கொண்டாள். கனவில் யாருக்கும் வியர்க்குமா என்ன?

கடைசி ஓவியம்

அந்த அழகியின் பின்புலத்தில் வானவில்லை வரைந்தது ஓவியருக்கு ஞாபகம் வர, உடனே தன் விரல்களைப் பார்த்தார். விரல்களில் தீற்றிக்கொண்டிருந்த நிறங்களின் ஈரம் காயாமல் பிசுபிசுப்புடன் அப்படியே இருந்தது.

ஒரு பறக்கும் நாளில்

நீங்கள் சாவகாசமாய் நடந்து வந்துகொண்டிருக்கிறீர்கள். திடுமென நிற்க முடியாமல் ஓடும் நோய் தாக்கிய ஒருவன் உங்களை இடித்துத் தள்ளிவிட்டு ஓடுகிறான். நீங்கள் ஓடத்துவங்குகிறீர்கள்.

கடவுளும் கேண்டியும்

“சரி இதுவரைக்கும் வந்தாச்சு அந்த நியூரோ மாப்பையும் எடுத்துப் பாத்துருவோமே,” என்று கடவுள் கூறக் கடவுளின் தலைமீது ஹெல்மெட்டைப் போலிருந்த ஒரு சாதனத்தைக் கேண்டி பொருத்தினான்.

பல்கலனும் யாம் அணிவோம்

ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.

மூக்குத் துறவு

“இப்ப காத்து இருக்குத்தானே?” என்றவாறு கைகளை இரு பக்கமும் வீசினேன். ஒன்றுமற்ற ஒரு வெளிக்குள் கைகள் அசைந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

யாமத்தும் யானே உளேன்

சிலபோது அவனுடைய அன்றாட வலி உடலைக் கவ்வி எரிக்கும்போது கௌதமன் தன்னை ஆற்றில் ஒழுகிச்செல்லும் தங்கக் கவசமணிந்த கர்ணனாகக் கற்பனை செய்துகொள்வான்.